fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜகிரிய – கொழும்புக்கு இடையில் நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 11:59

ராஜகிரிய – கொழும்புக்கு இடையில் நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டம்

ராஜகிரிய – கொழும்புக்கு இடையில் நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ் வண்டிகளுக்கென குறித்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பிரதேசத்தை அண்மித்த பகுதியில் நிலவும் வாகன நெரிசலை குறைப்பதே இதன் நோக்கமாகும். மக்களுக்கு தாமதமின்றி தமது பயணங்களை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கும் வகையில் புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் மேலும் இரு புதிய வீதிகள் நிர்மாணிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க