fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 10:03

பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலம் அடங்கிய உணவை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு, விவாசாய அமைச்சு மற்றும் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் இணைந்து திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. திட்டம் தற்போது தம்புத்தேக கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களே போஷாக்கு குறைந்த மாணவர்களாக காணப்படுவதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 10:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க