தாய்மை அடைந்துள்ள எமி
Related Articles
மதரசா பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் ஷங்கரின் ஐ திரைப்படம் மூலம் மிகவும் பிரசித்தமான இவர். அண்மையில் ஜோர்ஜ் பனாயிட் டோ என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்ததாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், இவர் தற்போது தாய்மை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எமி தனது இன்ஸ்டா பக்கத்தில் “நான் கூரையின் உச்சியில் இருந்து கூச்சலிட்டுக் சொல்லவேண்டும் என்று காத்திருக்கிறேன், இன்று, அன்னையர் தினமாக இருப்பது, இதை விட சரியான நேரமாக இருக்க முடியாது … நான் உன்னை விட இந்த உலகில் வேறு எதையும் நேசிக்கவில்லை, தூய்மையான மிகவும் நேர்மையான அன்பே. எங்கள் சிறிய லிப்ரா. உங்களை சந்திக்க காத்திருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
