fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிப்பில்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 17:59

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிப்பில்

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பில் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியுமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வரட்சியான காலநிலையால் வனப்பகுதிகளுக்கு தீ மூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 17:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க