ஹட்டன் ருவண்புர வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் 10 ஏக்கர் வனப்பகுதி முற்றாக அழிவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீ ஏற்பட்ட வனப்பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலையினால் தீ வேகமாக பரவியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள தொழிலாளர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.