fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

களனிவெளி ரயில் வீதிப் போக்குவரத்து சேவையில் புதிதாக இரு ரயில்கள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 17:05

களனிவெளி ரயில் வீதிப் போக்குவரத்து சேவையில் புதிதாக இரு ரயில்கள்

களனிவெளி ரயில் வீதிப் போக்குவரத்து சேவையில் புதிதாக இரு ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை மற்றும் ஹொமாகமவிற்கு இடையில் புதிதாக இரு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது .

கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 10.30 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் முற்பகல் 11.35க்கு ஹோமகமவை சென்றடையும். மற்றைய ரயில் மதியம் 12.30 மணிக்கு ஹோமாகமவிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 1.38 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலைய அங்குரார்ப்பண நிகழ்வுக்கு இணைவாக களனிவெளி ரயில் வீதிக்கான புதிய இரு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 17:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க