காலி மற்றும் மாத்தறைக்கு இடையிலான அதிவேக வீதியின் பஸ் கட்டணம் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மஹரகமவிலிருந்தான போக்குவரத்து நாளை முதல் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றமையினால் குறித்த கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய மஹரகமவிலிருந்து காலி வரை பயணிக்கும் அதிசொகுசு பஸ்வண்டிக்கான கட்டணம் 440 ரூபாவிலிருந்து 420 ரூபாவாகவும், மஹரகமவிலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் 550 ரூபாவிலிருந்து 530 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.