எதியோப்பிய விமான விபத்து தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விமானமொன்றின் விமானி குறித்த விமானம் மேல் நோக்கி பறப்பதை ஒளிப்பதிவுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானம் பறக்க ஆரம்பித்து சில நிமிடங்களில் விமானத்தின் பின்பகுதி நிலத்தை நோக்கிவருவதை குறித்த காணொளியில் காணக்கூடியதாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விமானம் பயணத்தை ஆரம்பித்து சரியாக 6 விநாடிகளில் விபத்து இடம்பெற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.