fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையம் இன்று மக்கள் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 10:17

மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையம் இன்று மக்கள் உரிமைக்கு

இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொட்டாவ, மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. கொட்டாவ மகாகும்புர ஹைலெவல் வீதிக்கு அருகில் சர்வதேச தரத்திலான பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியூடாக கொழும்பு நோக்கி வருகைத்தரும் வாகனங்களை குறித்த பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் தரித்து வைத்து, அங்கிருந்து ரயில் மற்றும் பஸ் வண்டியை பயன்படுத்தி போக்குவரத்து தேவைகளை பூர்த்திசெய்வதற்கு இதனூடாக பயணிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த மத்திய நிலையத்திற்கு அருகாமையில் ரயில் நிலையமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக பொதுமக்களுக்கு மற்றும் ரயில் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது மஹரகமையிலிருந்து ஆரம்பமாகும் காலி மற்றும் மாத்தறை வரையிலான அதிவேக வீதியின் ஊடாக சேவையில் ஈடுபடும் பஸ்கள் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மாகும்புற பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து தமது சேவைகளை ஆரம்பிக்கும்.

பொலன்னறுவை, அநுராதபுரம், பதுளை ஆகிய தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் இங்கு ஆரம்பமாகுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த மத்திய நிலையத்தில் தொழிநுட்ப தொடர்பாடல் வசதி, சிற்றுண்டிச்சாலை, வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்துடன் ஒன்றிணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாகும்புர ரயில் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்படும். நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் கலந்துகொள்ளவுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 10:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo