சிறுபோக நெற்செய்கைக்கான செய்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.டப்ளியூ.வீரகோன் தெரிவித்துள்ளார்.
நெற்செய்கைக்கு மேலதிகமாக, ஏனைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய உர செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.