fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடு பூராகவும் புதிதாக 175 மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 15:15

நாடு பூராகவும் புதிதாக 175 மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

நாடு பூராகவும் புதிதாக 175 மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மாதிரி கிராமங்கள் அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு செயற்பாட்டில் இன்றைய நாள் ஒரு முக்கிய மைல்கல்லாகும். ஒரேநாளில் அதிகளவான மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாதிரி கிராமங்களை அமைக்கும் செயற்பாட்டில் இன்றுடன் 2 ஆயிரத்து 100 மாதிரி கிராமம் என்ற இலக்கு அடையப்பெறவுள்ளது.

நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40வது வருட பூர்த்திக்கு இணைவாக வீடுகளுக்கான நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 31, 2019 15:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo