351 பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் வீதம் காணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற கட்டிடதொகுதியிலுள்ள குழு அறையில் இடம்பெற்றது.
காணி அமைச்சர் கயந்த கருணாதிலக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் கலந்துரையாடலில் பங்கு பற்றினர். பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் காணி வழங்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. திட்டத்தை முன்னெடுக்க குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.