fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Update : பாராளுமன்றம் இன்று முற்பகல் கூடியது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2019 08:04

Update : பாராளுமன்றம் இன்று முற்பகல் கூடியது

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இன்றைய தினம் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்சக்தி, எரிசக்தி அமைச்சு ஆகியவற்றின் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது. தற்போது மின்சக்தி எரிசக்தி அமைச்சு தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது. ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தனர்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் சிலர் கேள்வி எழுப்பினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்விகளுக்கான பதிலை வழங்கினார். மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க மின் துண்டிப்பு தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு முழுமையான விளக்கமளிப்பார். மேலதிக மின்சாரத்தை பெறுவது தொடர்பிலும் அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் குழுநிலை விவாதத்தின் போது இரு அமைச்சுக்கள் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சந்தர்ப்பத்தில் சபையில் இருக்காமையே இதற்கு காரணமாகும். 2 ஆயிரத்து 12 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 320 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்கெடுப்பு தோல்வியடைந்தமை எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தமாட்டாது.

எனினும் பாராளுமன்ற சம்பிரதாயத்தை பின்பற்றி மீண்டும் திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்து 320 ரூபாவை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உரையாற்றினார். குழுநிலை விவாதத்தின்போது அமைச்சுக்கள் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தமை இதற்கு முன்னரும் நடந்துள்ளன. எமது ஆட்சியின் போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன.

குறித்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் ஆளும்கட்சியுடன் கலந்துரையாடி மேற்கொண்ட தீர்மானங்கள் உள்ளன. இவ்வாறான தீர்மானங்கள் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லையென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை விவாதத்தின் மேலும் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களை வெளியிட்டனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2019 08:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க