தெஹிவளை காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.தெஹிவளை பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதோடு இந்த தீ விபத்தின் காரணமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இங்கு தீ விபத்து ஏற்பட காரணமென்ன என்பது தொடர்பாக தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.