fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மது போதையில் வாகனம் செலுத்தினால் பஸ்வண்டிகளின் அனுமதி பத்திரம் ரத்து

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 15:07

மது போதையில் வாகனம் செலுத்தினால் பஸ்வண்டிகளின் அனுமதி பத்திரம் ரத்து

சட்டத்தை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் முதலாம் திகதி முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

சாரதிகள் மது போதையில் வாகனம் செலுத்தினால் பஸ்வண்டிகளின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படவுள்ளது. மேலும் சாரதி மற்றும் நடத்துனருக்காக வழங்கப்பட்டுள்ள சிரூடை கட்டாயமாக அணியப்பட வேண்டுமென அதிகார சபையின் தலைவர் துஷித்த குணரத்தன தெரிவித்துள்ளார். தனியார் பஸ்களுக்காக குறித்த நடவடிக்கை அமுல்படுத்தப்படுகிறது.

மேலும் அனுமதி பத்திரம் வழங்கும்போது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க வேண்டியது கட்டாயமானதாகும். உத்தியோகபூர்வ சீருடை கட்டாயம் அணியப்பட்டிருக்க வேண்டும். மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்துவதை தடுக்க வேண்டும்.

இவ்விடயங்கள் குறித்து எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் கடுமையாக கண்காணிப்பப்படும். இதற்கென மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து சபை அதிகாரிகளும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை துஷித்த குணரத்தன தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 15:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க