fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கஞ்சிப்பானை இம்ரான் CIDயினரால் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 10:41

கஞ்சிப்பானை இம்ரான் CIDயினரால் கைது

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் நஜீம் இம்ரான் இன்று காலை இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர்.

அதற்கமைய தற்போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் , பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து செல்வதற்கான முயற்சியில் இருந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர். இதேவேளை கஞ்சிப்பானை இம்ரானுடன் மேலும் மூவர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை டுபாயில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட முன்னாள் சிறைச்சாலை காவலர் லலித் குமார் மற்றும் பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதிமால் பெரேரா ஆகியோர் நேற்று பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த பெப்பரவரி மாதம் மாகந்தூரே மதுசுடன் இவர்கள் டுபாயில் கைதுசெய்யப்பட்டனர். அதற்கமைய நதிமால் பெரேராவிடம் நீண்ட விசாரணை செய்த பின்னர் அவரை விடுவித்தனர்.

இதேவேளை சுகயீன விடுமுறையில் இருந்த காலப்பகுதியில் மாகந்துரே மதூசின் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டுபாய் சென்ற லலித் குமார எனும் சிறைச்சாலை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் மாகந்தூரே மதுசுடன் கைதுசெய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு சிறைச்சாலை அதிகாரியும் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிக்கிறது. இதனிடையே டுபாயில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதூஸ் மற்றும் பாடகர் அமல்பெரேரா உள்ளிட்டோர் இன்று மீண்டும் டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 10:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க