சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கென உரிய தினமொன்றை பேணுவதற்கும் தாமதமின்றி அவற்றை வெளியிடுவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 28ம் திகதி வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.