fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐரோப்பாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 10:34

ஐரோப்பாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கென ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

2021ம் ஆண்டளவில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பிளாஸ்டிக் கத்தி, கரண்டி போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு காரணமாக சூழலுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன. சமுத்திரத்தின் மாசடைவிற்கும், கடல் வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் இது பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை தடை செய்யக்கூடிய 10 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. மீள்சுழற்சி வேலைத்திட்டம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 10:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க