இந்தியாவின் பிரபல நட்சத்திர தொலைக்காட்சி புகழ் DD இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார். டிடி தற்போது தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சார்மி கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது. இந்தத் தகவலை டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்த நிலையில் சார்மி அதை பகிர்ந்துள்ளார்.