fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் வைத்திய சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றன

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2019 14:49

பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் வைத்திய சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றன

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றைய தினமும் இரணடாவது தினமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைகளில் வழமைப்போல் சேவைகள் இடம்பெறுகின்றன.

அனைவருக்கும் தாதியர் பட்டங்கள் வழங்கப்படவேண்டும், தாதியர் சேவை முக்கிய சேவையாக கருதப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் பிரகாரம் இந்த சங்கத்தில் அங்கம் வகிக்கும் தாதியர்கள் நேற்றும் இன்றும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களின் போராட்டம் தோல்வியடைந்துவிட்டதாகவும் வைததியசாலைகளில் வழமைப்போன்று பணிகள் இடம்பெற்று வருவாதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த நோயாளிகள் போராட்டமோ அல்லது பகிஷ்கரிப்போ இடம்பெறவில்லையென வழமைப்போன்று சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

பகிஷ்கரிப்பு போராட்டம் யாரால் முன்னெடுக்கப்படுகின்றது? பிக்குகளே இதனை மேற்கொள்கின்றனர். நோயாளிகளுக்கு சேவை செய்யுமாறே புத்தபெருமான் பிக்குகளுக்கு போதித்துள்ளார். ஆனால் பிக்குகளே இன்று நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டாம் என சொல்கின்றனர். எனது அரசியலை நான் எப்போதும் தொழிற்சங்கத்துடன் இணைத்தது. இல்லை. தொழிலாளர் உரிமை தொடர்பான அமைப்பொன்று இன்று என்னிடம் கலந்துரையாடியது. எதிர்காலத்தில் டாக்டர்களோ, தாதியர்களோ பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை அனுமதிக்கபோவதில்லையென அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அவர்களுக்கு எதிராக மூன்றாவது சக்தியாக வருவோம் என அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். பொதுமக்களுக்கு எதிராக பாடுபடுவதாக அவர்கள் தெரிவித்தார்கள். ஆகவே பொதுமக்கள் எப்போதும் பொறுமையுடன் இருக்கமாட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2019 14:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க