fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நதிமால் பெரேரா நாடு கடத்தப்பட்டார்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2019 12:58

நதிமால் பெரேரா நாடு கடத்தப்பட்டார்

மாகந்துரே மதுஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு அங்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் நாடுகடத்தப்பட்டனர். பிரபல பாடகரான அமல் பெரேராவின் புதல்வர் நதிமால் பெரேரா, மற்றும் சிறைச்சாலை அதிகாரியொருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.

கடந்த பெப்ரவரி 5ம் திகதி மாகந்துரே மதுஷூடன் டுபாயில் வைத்து சிலர் கைது செய்யப்பட்டனர். டுபாயில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் போதை பொருட்களுடன் 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நதிமால் பெரேரா போதை பொருள் பயன்படுத்தவில்லையென தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரும், கோதாகொட ஆராச்சிகே லலித் குமார எனபடும் சிறைச்சாலை அதிகாரியொருவ்ரும் டுபாயில் இருந்து நேற்று இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவர் இன்று எப்.இஸட் 547 இலக்கதினை உடைய பிளை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்கவிற்கு வருகை தந்தனர். இவர்கள் விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதை பொருள் பிரிவின் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2019 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க