fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெல்லியை வீழ்த்திய சென்னை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2019 09:52

டெல்லியை வீழ்த்திய சென்னை

ஐ.பீ.எல். தொடரின் 5ஆவது போட்டி நேற்று டெல்லியில் இடம்பெற்றது.இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கெபிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சீகர் தவான் 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.டீ.ஜே.பிராவோ அதிகபட்சமாக 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

148 எனும் வெற்றியிலக்கை நோக்கி களம்நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவைத்தது.

வொட்சன் அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றார்.அமித் மிஷ்ரா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

ஷேன் வொட்சன் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2019 09:52

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க