fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விவசாய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும்-அமைச்சர் பி.ஹெரிசன்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 14:29

விவசாய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும்-அமைச்சர் பி.ஹெரிசன்

விவசாய அமைச்சர்கள் மாற்றமடைந்த போதிலும் மாற்றமடையாத நாட்டுக்கு பொருந்த கூடிய தேசிய விவசாய கொள்கையொன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

புத்தரிசி பொங்கும் நிகழ்வை நடாத்துவது தொடர்பாக அரச அதிகாரிகளுடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. விவசாய கொள்கையை வகுப்பதற்காக புத்திஜீவிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும்பாலானோரின் கருத்துக்களை பெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இறக்குமதி தொடர்பாக கருத்திற்கொண்டு விவசாய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும். அத்துடன் எமது நாட்டு உற்பத்தி தொடர்பாகவும் கருத்திற்கொள்ளப்படவேண்டும். அடுத்து வரும் ஒரிரு மாதங்களுக்குள் ஒழுங்கு முறைக்கு அமைய இதனை தயாரிக்க உத்தேசித்துள்ளோம். இதனால் எவருக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. உலக நாடுகளின் இவ்வாறான முறைகள் கையாளப்படுகின்றன. அரசாங்கம் ஒன்று மாறும் போதும் அமைச்சர்கள் மாறும் போது இவை மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு சென்றால் நாட்டின் விவசாய துறை வீழ்ச்சியடையும் நாடும் மக்களும் எதிர்பார்கின்ற விவசாய துறையின் முன்னேற்றங்களை எம்மால் அடைந்துகொள்ள முடியாது போகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 14:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க