fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராதாரவியை கண்டித்து நயன்தாரா அறிக்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 12:15

ராதாரவியை கண்டித்து நயன்தாரா அறிக்கை

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு திரையுலகில்  பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வதான கருத்துகளால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 12:15

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க