மேலும் இரு ஒசுசல மருந்தகங்கள் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. மாத்தளை மற்றும் தம்புள்ளை ஆகிய நகரங்களில் மருந்தகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சகல தேர்தல் பிரிவுகளுக்கும் தலா ஒரு ஒசுசல மருந்தகங்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான மற்றும் குறைந்த விலையில் மருந்துகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரச ஒசுசல மருந்தகங்கள் நாடளாவிய ரீதியில் திறக்கப்படுவதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.ரோமி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கேகாலை, பதுளை, தர்கா நகர் ஆகிய பகுதிகளிலும் ஒசுசல மருந்தகங்களை அங்குரார்ப்பணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.