உயர் கல்வி தர பாதுகாப்பிற்கான முகவர் நிறுவனங்களின் சர்வதேச வலைப்பின்னல் நிறுவன மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது. 11வது ஆசிய பசுபிக் தர வலைப்பின்னல் வருடாந்த கல்வி மாநாடு இதற்கிணைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர் கல்வி தர பாதுகாப்பிற்கான 300 சர்வதேச வலைப்பின்னல் நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளன. உலகின் உயர் கல்வி துறையின் பிரதான இரு நிறுவனங்கள் ஒரே இடத்தில் மாநாட்டை நடத்தும் அரிய சந்தர்ப்பம் இம்முறை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.