நீர் கொழும்பு பிரதேசத்திலுள்ள உணவமொன்றில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து மாணிக்கல் மற்றும் 50 ஆயிரம் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த மாணிக்க கல்லை விற்பனை செய்வதற்கென வர்த்தகர் உணவகத்திற்கு வருகைதந்துள்ளார்.
அதை கொள்வனவு செய்யும் வகையில் வருகை தந்த இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கொள்ளையிட்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.