முல்லைத்தீவில் 100 சட்டவிரோத வலைகள் மீட்பு
Related Articles
முல்லைத்தீவில் 100 சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு உதவி கடற்றொழில் விசாரணை அதிகாரிகள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிசார் இணைந்து இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 60 கிலோ கிராம் மீன்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.