fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமரின் பிறந்த தினம் : சுயாதீன தொலைக்காட்சி செய்தி பிரிவின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 24, 2019 09:45

பிரதமரின் பிறந்த தினம் : சுயாதீன தொலைக்காட்சி செய்தி பிரிவின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்

இலங்கை அரசியல் வரலாற்றில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக ஆளும் கட்சி எதிர்கட்சியின் அனைவரது கௌரவத்திற்கும் பாத்திரமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70வது பிறந்த தினம் இன்றாகும். பிரதமருக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பும் வசந்தம் தொலைகாட்சியும் தெரிவித்து கொள்கின்றது.

4வது தடவையாக பிரதமராக பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதுடன், கொண்டாடும் முதலாவது பிறந்த தினம் இன்றாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் மிஸ்டர் கிளின் அத்துடன் திருவாளர் பரிசுத்தம் என்ற அடைமொழியை கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய நல்லிணக்க நாடு ஒன்றை கட்டியெழுப்புவதற்கு முன் நின்று செயற்பட்டார். இலங்கை மக்களின் பெரும்பான்மையானோர் அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளமை சமகால தேர்தலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கை வரலாற்றில் தனிநபர் ஒருவர் பெற்று கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகளை இதன் அடிப்படையிலேயே அவர் பெற்று கொண்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை தோன்றிய அனைத்து கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்பில் நோக்கும் போது ரணில் விக்கிரமசிங்க அளவிற்கு அரசியல் ஞானம் கொண்ட ஒருவர் இல்லையென்பது நிதர்சனமாகும்.

அவர் அரசியல் ரீதியில் தோல்வியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாட்டை ஆபத்தில் தள்ளாமல் மிக பொறுமையுடனும் புத்தி சாதுர்யத்துடனும் தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்துக்கொண்டிருந்த சிறந்த அரசியல்வாதியாவார்.

1949 மார்ச் 24ம் திகதி எஸ்மன் விக்ரமசிங்க மற்றும் நாலினி விக்ரமசிங்க ஆகியோருக்கு இரண்டாவது புதல்வராக அவதரித்த ரணில் விக்கிரமசிங்க 1970ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை களனியில் ஆரம்பித்தார்.

பியமக தொகுதி அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அப்போதைய ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கை அமைச்சரவை வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட மிக இளவயது அமைச்சர் ஆவார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை ஆரம்பித்து சமூக புரட்சிக்கு வித்திட்ட ரணில் விக்கிரமசிங்க பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆரின் அரசாங்கத்தில் கல்வியமைச்சராக மேற்கொண்ட புரட்சிகள் இன்றும் அமுலில் உள்ளன.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபட்டதாரியாவார். இலங்கையின் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்று இல்ங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்ட முதலாவது நபரும் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். 1993ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க 2001ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். கடந்த வருடம் ஜனவரி 9ம் திகதி அவர் 3வது தடவையாகவும் ஆகஸ்ட் 21ம் திகதி நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பிரிவின் பேராசிரியையான மைத்ரி விக்ரமசிங்கவை 1994ம் ஆண்டு கரம் பிடித்தார். இலங்கை அரசியலிலும் சர்வதேச ரீதியிலும் அவர் பெரும் புகழ்பெற்ற ஒரு அரசியல்வாதியாவார். அவர் அரசியல் முதிர்ச்சியும் புத்தி சாதுர்யம் மிக்க அரசியல்வாதி என்பதை ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தன்னால் முடிந்தவற்றையே பேசும் அரசியல்வாதியாக புகழ்பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே ஒரு மனிதநேய அரசியல்வாதியாவார். சர்வதேசத்தில் அவருக்கு பெரும் வரவேற்புள்ளது என்பதை எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூட கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றி அரசியல் உலகில் மேலும் நீண்ட பயணம் செல்ல அவருக்கு இறைவன் ஆசி புரிய வேண்டுமென்பதே பொதுமக்களின் பிரார்த்தனையாகும்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 24, 2019 09:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க