மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை
Related Articles
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டி-20 போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது இலங்கை.
நேற்று செஞ்சூரியனில் ஆரம்பமான 2 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைதேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களi இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஹென்ட்ரிக்ஸ் 65 ஓட்டங்களை பெற்றார்.மாலிங்க உதான தனஞ்சய ஆகியோர் தலா ஒரு ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.181 எனும் ஓரளவு சவாலான ஓட்ட எண்ணிக்கையை குறி வைத்து களமிறங்கிய இலங்கை அணியினால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இசுரு உதாண 48 பந்துகளை எதிர்கொண்டு 8 பெண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை பெற்று மைதானத்தில் அதிரடியோடு வான வேடிக்கை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.இருந்தும் ஏனைய வீரர்கள் கைகொடுக்க தவறிவிட்டனர்.மொரிஸ் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
தென்னாபிரிக்கா அணி 16 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
இதனடிப்படையில் 3 டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 எனும் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
ஆட்ட நாயகனாக டசன் தெரிவானார்.