fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக நீர் தினம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2019 13:21

உலக நீர் தினம்

உலக நீர் தினம் இன்றாகும். இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குடிப்பதற்கு சுத்தமான நீர் இன்றி உலகலாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திண்டாடி வருகின்றனர். மனிதன் உயிர்வாழ பிரதான அத்தியாவசிய தேவைகளில் நீரும் ஒன்றாகும். நீர்வளத்தை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.

மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக சுத்தமான நீர் அசுத்தம் அடையும் சந்தர்ப்பங்கள் ஏராளம். நீரை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் அதேவேளை வீண்விரயம் செய்யப்படுவதும் அதிகமாக காணப்படுகின்றது.

இந்த செயற்பாடுகளில் இருந்து தவிர்த்து நீரை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும். சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள செய்தியில் இலங்கை நீண்ட காலமாக நீர் முகாமைத்துவம் மற்றும் நீர்வளத்தை பாதுகாப்பதில் இலங்கை கூடிய கரிசணை செலுத்தி வருவதாக தெரிவித்தார். இயற்கை வளமான நீரினை முறையாக பாதுகாக்க நாட்டில் வாழும் அனைத்து மக்களும் தம்மாலான பங்களிப்பை செலுத்த வேண்டுமென அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2019 13:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo