மனித உரிமை இலங்கையின் நல்லிணக்க முன்னேற்றம் மற்றும் பொறுப்புகூறல் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை எந்தவித வாக்கெடுப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று 2015ம் ஆண்டு பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த மேலும் 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கருத்து வெளியிடுகையில் இப்பிரேரணை இவ்வாறு நிறைவேற்றபபட்டமையானது இலங்கை அரசியல் ரீதியாக முன்னெடுததுள்ள அர்ப்பணிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அடையாளம் என்பதை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
பிரேரணையில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தவும் உறுதி செய்யவும் உரிய தேசிய நிறுவனங்களோடு இணைந்து நெருக்கமாக செயற்படுவதற்கு மனித உரிமைகள ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கின்றோம். கீழ் மட்டத்தில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்வதற்காக மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சுயாதீன நிறுவனங்களுடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலமாக உண்மையான தகவல்களை பெற்று கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் மேலும் எதிர்காலத்தில் யதார்த்தபூர்வமான கணிப்பீடுகளை மனித உரிமைகள் பேரவைக்கு பெற்று கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி கூறுகின்றோம். மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை திறந்த மற்றும் முன்னேற்றகரமான செயற்பாடுகளை இனங்கண்டுள்ளது. பிராதனமாக உள்ள ஏழு மனித உரிமை அமைப்புக்களோடு இணைந்து இலங்கை செயற்படுகின்றது. மனித உரிமைகள் அமைபபின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன நிபுணர்கள் மேற்கொண்டுள்ள எட்டு சுற்றுலா பயணங்களுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கியது.
இதன்மூலம் இலங்கை துரிதமாக மேற்கொள்ளவேண்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் கிடைத்துள்ளன. அரசியல் அமைபபின் ஊடாக வழங்கப்படும் ஒதுக்கீடுகளின் மூலம் வழிக்காட்டுதல்களை பெற்று கொண்டு நாட்டின் தேசிய இலக்கினை ஒன்றாக இணைந்து சகல இலங்கையர்களுக்கும் பெற்று கொடுக்கவும் பாதுகாக்கவும் பிரயோக ரீதியான தீர்வினை வழங்க நாம அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். சகல அரசியல்வாதிகள் மற்றும் இலங்கை சமூகத்துக்கும் நாட்டை விட்டு வெளியேறியிருகின்ற புலம்பெயர்ந்தவர்களுக்கும் இதன்மூலம் சிறந்த சான்றிதழ் கிடைக்க வேண்டுமென அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.