fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரபுக்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் முறை மாற்றப்பட வேண்டும்-பா.உ. ரில்வின் சில்வா

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2019 14:54

பிரபுக்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் முறை மாற்றப்பட வேண்டும்-பா.உ. ரில்வின் சில்வா

பிரபுக்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் முறை மாற்றப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அக்கட்சியின் இரத்தினபுரி ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொள்ளையடித்து வழக்குககளை எதிர்கொண்டிருப்பவர்களே தேர்தலை நடத்துமாறு கோறுகின்றனர். மீண்டும் ஒரு ஊழல் பேர்வழியை ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிஸ்டத்தை மாற்றுவது அல்ல, ராஜபக்ஷமார்களையே மாற்ற வேண்டும். பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷவை களமிறக்க மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். பிரபுக்களினால் மட்டுமே நாட்டை நிர்வகிக்க முடியுமென சமூகம் நினைக்கின்றது. பொது அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களே மாணிக்க கல் கொள்ளை, காடழிப்பு, போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் என மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2019 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க