யாழ் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் மண்டைதீவைச் சேர்ந்த 19 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். கடற்றொழிலுக்காக தனது நண்பருடன் கடலுக்குசென்ற வேளை காற்றின் வேகம் அதிகரித்தமையால் படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது குறித்த இரு இளைஞர்களும் நீந்தி கரை திரும்ப முற்பட்ட போதிலும் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

படகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்