fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊடக கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்-வசந்தம் செய்திப்பிரிவின் சரண்யாவுக்கு தங்கப்பதக்கம்(photos)

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2019 13:17

ஊடக கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்-வசந்தம் செய்திப்பிரிவின் சரண்யாவுக்கு தங்கப்பதக்கம்(photos)

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒரு வருட ஊடக கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், அதில் வசந்தம் செய்தி பிரிவின் எம்.சரண்யாவுக்கு சிறந்த சாதனையாளருக்கான தங்க பதக்கம் வழங்கப்பட்டது.

கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற ஊடக கற்கை நெறியை பூர்த்தி செய்த 145 பேருக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் வசந்தம் தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர்களான க.புண்ணியமூர்த்தி, எம்.சரண்யா, வசந்தம் எப்.எம்.மின் செய்தி ஆசிரியரான உதயசாந்தி மற்றும் வசந்தம் ரி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் எஸ். தினேஸ் ஆகியோரும் சான்றிதழ்களை பெற்று கொண்டனர். இதன்போது மும்மொழிகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டதுடன், வசந்தம் தொலைகாட்சியின் செய்தி வாசிப்பாளர் எம்.சரண்யா தமிழ் மொழிமூலம் சிறந்த சாதனையாளருக்கான தங்க பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

 

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2019 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க