fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து மீண்டும் முதலிடம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2019 14:45

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து மீண்டும் முதலிடம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நோர்டிக் நாடுகளான பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. இதேவேளை 14வது இடத்திலிருந்த அமெரிக்கா தற்போது 19வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத்தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் தொடர்பான விடயங்களை கருத்திற்கொண்டு குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2019 14:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo