இலங்கைக்கு ஊறுவிளைவிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் பிரான்ஸ் அரசாங்கம் மேற்கொள்ளாதென இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்தூ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திற்கு தொடர்ந்தும் உதவி அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அஸ்கிரிய விஹாரைக்கு சென்று மஹாநாயக்க சங்கைக்குரிய வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்தார். இலங்கையின் அபிவிருத்திற்கு பிரான்ஸ் போதிய ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்த தூதுவர் தற்போது கந்தளாய் பகுதியில் பிரான்ஸ் அரசின் அனுசரனையில் பல்வேறு வாவிகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் மஹாநாயக்கரிடம் பிரான்ஸ் தூதுவர் கூறினார். இலங்கையில் மேலும் பல அபிவிருததி திட்டங்கள் தொடர்பில் தமது அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் அதற்கான ஆலோசனைகள் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.