fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பபி எனப்படும் இசுரு சமிந்த என்பவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2019 14:26

பபி எனப்படும் இசுரு சமிந்த என்பவர் கைது

பாதாள உலகத் தலைவரான அங்கொட லொக்காவின் சகாவான கடுவெல பபி என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப் பொருட்களுடன் கடுவெல பபி எனப்படும் இசுரு சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1. 100 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும் 600 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன. இவரிடம் மேற்கொள்ளப்பட விசாரணைகளைத் தொடர்ந்து மற்றொரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து புராதன பெறுமதி வாய்ந்த புத்தர் சிலையொன்றும் நான்கு மாணிக்க கற்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2019 14:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க