fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வட மாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் குலபேதம் பெரும் முட்டுக்கட்டை-ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2019 13:05

வட மாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் குலபேதம் பெரும் முட்டுக்கட்டை-ஜனாதிபதி

வட மாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் குலபேதம் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் குற்றவியல் விஞ்ஞான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்டபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்டபெற்ற இந்நிகழ்வில் சமூக விஞ்ஞான மற்றும் குற்றவியல் விஞ்ஞான டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்ய 166 பேருக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலில் ஜனாதிபதியினால் ஆறு பேருக்கு அடையாளம் நிமித்தம் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஐ.நா.வில் பிரதி பொதுச் செயலாளராக பதவி வகித்த ஒருவர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவருடன் நான் இவ்விழாவிற்கு வருகை தர முன்னர் பேசிக் கொண்டிருந்தேன். எனது பதவிக் காலத்தில் இந்நாட்டின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதா என்று என்னிடம் வினவினார். அதில் எனக்கு 50 வீதம் திருப்தியும் 50 வீதம் அதிருப்தியும் இருப்பதாக தெரிவித்தேன். மகிழ்ச்சி வேதனை நிரம்பிய அனுபவங்கள் எனக்கு இருப்பதாக நான் தெரிவித்தேன். எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என என்னிடம் தெரிவித்தார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் வடக்கில் காணப்படும் குளபேத பிரச்சினைகள் ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதை தெரிவித்தேன். நாங்கள் தற்போது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் வடபகுதி மக்கள் மத்தியில் அந்த நல்லிணக்கம் இல்லை. சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதிலும் பார்க்க வடக்கில் காணப்படும் குளபேதமே பெரும் பிரச்சினையாகும். இதனால் அவர்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாதுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க