fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2019 12:49

டி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை

இலங்கையுடனான முதலாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் இடம்பெற்ற இந்தப் போடடியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. இதன் பிரகாரம் களமிறங்கிய இலங்கை அணியின் முதலாவது விக்கெட் 07 ஓட்டங்கள் பெற்றிருந்த போது வீழ்ந்தது. இதனைத் தொடர்ந்து அவிஷ்க பெர்ணான்டோ மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் அணியை சரிவிழிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 16 ஓட்டங்கள் பெற்றிருந்த போது அவிஷ்க பெர்ணான்டோ ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அபாரமாக துடுப்பெடுத்தாடிய கமிந்து மென்டிஷ் 41 ஓட்டங்களைப் பெற்றார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. 135 ஓட்டங்கள் பெற்றால் n;வற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி முதலில் ஓட்டங்கள் பெற தடுமாறியது. இசுரு உதான மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். இசுரு உதான வீசிய இறுதி ஓவரில் கடைசி பந்தில் தென்னாபிரிக்காவுக்கு வெற்றி பெற இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், அவர்களால் ஒரு ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதன் பிரகாரம் தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இந்நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றதால், சுப்பர் ஓவர் அறிமுகப்படுத்தப்பட்டது. லசித் மாலிங்க வீசிய சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்க அணி 14 ஓட்டங்களைப் பெற்றது. இதற்கு பதில் அளித்த இலங்கை அணியால் ஐந்து ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக டேவிட் மிலர் தெரிவினார். இரு அணிகளுக்கிடையில் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2019 12:49

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க