fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோக தடை : வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2019 16:09

நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோக தடை : வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

நாட்டின் சில பகுதிகளில் மின்விநிளோக தடை ஏற்பட்டுள்ளது. அத்துருகிரியவிலிருந்து கொலன்னாவ கிறீட் உப மின் நிலையம் வரை 122 மெகாவோட் மின்சாரத்தை கொண்டுசெல்லும் கடத்திகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணமென மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்று காலை 8.15 மணியிலிருந்து குறித்த மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அம்பாறை, குருநாகல் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளது. கோளாறை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். இதேவேளை நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகலளவில் மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள இரண்டாவது மின் பிறப்பாக்கியை, மின் கட்டமைப்பில் இணைக்கமுடியுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். இதேவேளை நேற்று முற்பகல் அனல்மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல பிரதேசங்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2019 16:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க