fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊழல் மற்றும் மோசடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 10:44

ஊழல் மற்றும் மோசடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம்

ஊழல் மற்றும் மோசடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறந்த பண்புகளை கொண்ட சிறுவர்களை உருவாக்குதல், வினைத்திறன்மிக்க தனியார் மற்றும் அரசதுறை சேவையாளர்களை உருவாக்குதல், சட்டம் மற்றும் ஒழுங்கு என்பன அனைவருக்கும் சமநிலையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தல் போன்றன குறித்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகம், அரச நிர்வாக அமைச்சு என்பன இணைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதற்கென அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 10:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க