கடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்
Related Articles
‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டு வந்து வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. அத்துடன் அவர் புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் அது தொடர்பில் தகவல்களை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டது ,எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்த வடுக்கள் உள்ளன. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன். கடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன். என கூறியுள்ளார்.