fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ வேலைத்திட்டம் பிரதமரால் அங்குரார்ப்பணம்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2019 15:29

‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ வேலைத்திட்டம் பிரதமரால் அங்குரார்ப்பணம்..

‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ வேலைத்திட்டத்திற்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த 200 வீதி அபிவிருத்தி திட்டங்கள் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப நிகழ்வாக நீர்கொழும்பு, கொச்சிக்கடை புதிய பாலம் மக்களிடம் இன்று வழங்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. மாவனெல்ல ஹெம்மாத்தகம கம்பொல வீதி, மாவனெல்ல அரநாயக்க வீதி, மாவனெல்ல ரம்புக்கனை மற்றும் கம்பஹா புத்தளம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார். மாவனெல்லை ஹெம்மாத்தகம கம்பொல வீதி மற்றும், மாவனெல்லை ரம்புக்கனை வீதி பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டது. இதனையடுத்து கம்பொல கொச்சிக்கடை புதிய பாலமும் மக்கள் உரிமைக்கு வழங்கப்பட்டது. இதேவேளை நாடு முழுவதும் வீதிகளை அபிவிருத்திக்கு உட்படுத்தி புதிய போக்குவரத்து கட்டமைப்பொன்றை உருவாக்குவதே பிரதான நோக்கமென அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2019 15:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க