fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நியுசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் : 49 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2019 11:27

நியுசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் : 49 பேர்  பலி

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான். அங்கும் சிலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2019 11:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க