தமிழ் சினிமாவின் காதல் ஜோடியாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி குறித்து தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அடிக்கடி நயன்தாராவை புகழ்ந்து விக்னேஷ் சிவனின் காதல் பதிவுகள் போடுவது வழக்கம். அந்தவகையில் மகளிர் தினத்தன்று, மார்ச் 8 ல் ’நீ என் உலக அழகியே… உன்னை போல் ஒருத்தி இல்லையே’ என்று ஜெர்சி படத்துக்காக தான் எழுதிய பாடல் வரிகளை பகிர்ந்தார். அத்துடன் நயன்தாரா சேலையில் இருக்கும் படத்தை வெளியிட்டு ’நீண்ட நாட்களுக்கு பிறகு என் தங்கத்துடன் டின்னர்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இது தற்போது வைரலாக பரவி வருகின்றது.