நாசா செவ்வாய் கிரகம் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்கி ஆய்வு மேற்கொள்ள நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளுக்கு நாசா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளதாகவும் அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார் என்றும் நாசா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த மாத இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண் விஞ்ஞானிகளை விண்ணில் நடக்க வைப்பதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இந்த 2 பெண்களில் ஒருவர்தான் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.