சிலாபம் கொழும்பு பிரதான வீதியின் பம்பல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞர்கள் இருவர் வேன் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த வேனில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். வேனின் பிற்பகுதியில் மோதி வீதியில் வீழந்த குறித்த இளைஞர்கள் இருவரும் சிலாபம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸூக்கு அடியில் சிக்குண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பஸ் வண்டி மற்றும் வேனின் சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி
படிக்க 0 நிமிடங்கள்