fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2வது விசேட நீதாய மேல் நீதிமன்ற செயற்பாட்டு நடவடிக்கைகள் இன்று முதல்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2019 10:58

2வது விசேட நீதாய மேல் நீதிமன்ற செயற்பாட்டு நடவடிக்கைகள் இன்று முதல்..

2வது விசேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் திறக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் மற்றும் குற்ற வழக்கு விசாரணைகள் விசேட நீதிமன்றில் விசாரிக்கப்படும். மூவரடங்கிய நீதவான்களைக் கொண்ட 3 விசேட நீதாய மேல் நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதலாவது நீதிமன்றம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. ஊழல், நம்பிக்கைக்கு துரோகமிழைத்தல், நிதி துஷ்பிரயோகம், நிதிச்சலவை, பயங்கரவாத செயற்பாடுகளுக்கான நிதி உதவி வழங்குதல், திட்டமிட்ட குற்றச்செயல் மற்றும் பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசேட நீதிமன்றங்களில் விசாரணைகள் நடத்தப்படுமென நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2019 10:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க