fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போயிங் 737 ரக விமானம் தடை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2019 13:12

போயிங் 737 ரக விமானம் தடை

போயிங் 737 ரக விமானங்களை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ள போதும் தமது நாடு அந்த விமானங்களை தொடர்ந்தும் பயன்படுத்தும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. போயிங் விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. ஏனைய நாடுகள் அந்த விமானங்களை தடை செய்த போதும் கூட தமது நாடு அதனை தொடர்ந்தும் பயன்படுத்தும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த விமானங்கள் பாதுகாப்பானவையென அமெரிக்க விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் எத்தியோப்பியாவில் ஏற்பட்;ட விபத்தில் போயிங் மெக்ஸ் 8 ரக விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் 157 பயணிகள் மரணமடைந்தனர். இதனை தொடர்ந்தே பல்வேறு நாடுகள் இந்த விமானத்தை தடை செய்துள்ளதுடன், அண்மையில் சீனா குறித்த ரக விமானங்களை அனைத்தையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவித்திருந்தது. ஐரோப்பா, சீனா, இந்தியா, பிரிட்டன், சிங்கபூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போயிங் விமானங்கள் பரப்பில் ஈடுபடுவதை தடை செய்துள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2019 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க